திருச்செந்தூர் கோவிலில் 2½ கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் கோவிலில் 2½ கோடி உண்டியல் காணிக்கை
X

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2½ கோடி கிடைத்துள்ளது.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் பொதுமக்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது.கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

இதில், நிரந்தர உண்டியலில் ரூ.2 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 378-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 415-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 282-ம், அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 835-ம், குலசேகரன்பட்டினம் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 226-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மொத்தத்தில் உண்டியலில் மட்டும் ரூ.2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதுதவிர 1,129 கிராம் தங்கம், 21 கிலோ 246 கிராம் வெள்ளி, 37 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!