பால்குடம், சீர்வரிசை தட்டுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு ஊர்வலம்
தமிழ்நாடு வேடுவர் நல சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம், வள்ளி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்றனர்.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பால் குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு வேடுவர் நலச்சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு பால் குடம் எடுத்தும், வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதனை முன்னிட்டு ரயில் நிலையம் அருகே உள்ள ஆனந்த விநாயகர் கோயிலிருந்து பெண்கள், ஆண்கள் சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வடக்கு ரதவீதி, சன்னதி தெரு வழியாக மேலும் சுவாமி வள்ளி அம்பாளுக்கு பல்வேறு தம்பூலன்களில் பட்டுசேலை, பூ, ஆரஞ்சு, ஆப்பிள் திராட்சை உள்ளிட்ட பல்வேறு பல வகைகள் அடங்கிய சீரிவரிசைகளை ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர் பின்னர் கோவிலில் மூலவரை வழிபட்டுவிட்டு வள்ளியம்மன் சன்னதியில் சீர்வரிசை கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu