திருச்செந்தூரில் மணல் சிவலிங்கத்தை வழிபட்ட கேரள பக்தர்கள்

திருச்செந்தூரில் மணல் சிவலிங்கத்தை வழிபட்ட கேரள பக்தர்கள்
X

திருச்செந்தூர் கடற்கரையில் கேரள பக்தர்கள் மணலால் சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டனர். 

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு மணலால் சிவலிங்கம் உருவாக்கி கேரள பக்தர்கள் வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர், இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் சிலர் சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, மதுரை பகுதிகளிலுள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்தனர். கோவில் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் உருவாக்கினர். பின்னர் யாகம் வளர்த்து, பூஜை செய்து வழிபட்டனர். கடற்கரைக்கு வந்த பக்தர்கள் இந்த மணலால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டு சென்றனர். மேலும் சிலர் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்