/* */

அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி எம்.பி.

அண்ணன் ஸ்டாலின் பாணியில் தங்கையான கனிமொழி எம்.பி.யும் சாலையோர டீ கடையில் தேநீர் அருந்தினார்.

HIGHLIGHTS

அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி எம்.பி.
X

சாலையோர டீ கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி எம் பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. திடீரென சாலையோரத்தில் இருந்த ஒரு கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார்.

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளத்தில் அங்கன்வாடி கட்டிடத்தினை அவர் திறந்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

அப்போது, திடீரென கருங்குளம் பிரதான சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு கடையின் முன்பு வாகனத்தை நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறினார். கனிமொழி எம்.பி.யின் கார் திடீரென சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அனைத்து வாகனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

சாலையோர டீ கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி எம்பி. உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள்.

இதைதொடர்ந்து, சாலையோரத்தில் இருந்த ஒரு தேநீர் கடைக்குச் சென்ற கனிமொழி எம்.பி. அந்த கடையின் முன்பு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து தேநீர் குடித்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் தேநீர் குடித்தனர்.

கனிமொழியின் எம்பியின் சகோதரரும், திமுக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த நடைபயணம் சென்றபோதும் சரி, அதன் பின்னர் தேர்தர் பிரசாரத்தின்போதும் பல இடங்களில் இதுபோல் சாலையோர டீ கடைகளில் தேநீர் அருந்தியது உண்டு. தனது அண்ணனான ஸ்டாலின் பாணியில் தற்போது அவரது தங்கையான கனிமொழியும் சாலையோர டீ கடையில் தேநீர் அருந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 5 லட்சம் நிவாரணம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடன்குடி பேரூராட்சியின் தற்போதைய தலைவியின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான தி.மு.க.வைச் சேர்ந்த ஆயிஷா என்பவர் ஜாதியைச் சொல்லி இழிவாக திட்டியதால் மனம் உடைந்து சுடலைமாடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆயிஷாவை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சுடலைமாடன் வீட்டுக்கு இன்று சென்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி எம்பி. சுடலைமாடன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் ரூ. 5 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனிருந்தனர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது. ஆயிஷா கைது செய்யப்பட வேண்டும் என்பதில் அரசும், நானும் உறுதியாக இருக்கிறோம். ஆயிஷாவை போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என கனிமொழி எம்.பி. அப்போது தெரிவித்தார்.

Updated On: 1 April 2023 4:01 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...