/* */

'எங்கே எனது தடுப்பூசி' முழக்கம் : தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

எங்கே எனது தடுப்பூசி என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எங்கே எனது தடுப்பூசி முழக்கம் : தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
X

எங்கே எனது தடுப்பூசி முழக்கமிடும் அனைத்திந்திய இளைஞர்  பெரு மன்றத்தினர்.

எங்கே எனது தடுப்பூசி என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஓருபகுதியாக தூத்துக்குடியில் போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான 14 கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்கிட வேண்டும், தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கிட வேண்டும், உற்பத்தி செய்யும் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கி அவர்கள் பொதுமக்களிடம் அதிக தொகை வசூலிப்பதை தடுத்து நிறுத்து வேண்டும், காலதாமதமின்றி செங்கல்பட்டு HLL தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜாசிங் ,செண்பகமல் ராஜா, காளீஸ்வரன் , பலவேசம் , சக்தி, சூர்யா , தீலீபன் ,குமார், பிரபா,அர்ஜுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 13 July 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...