வாட்ஸ் ஆப்பில் ஆபாச படம் அனுப்பிய வாலிபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு இனம் தெரியாத ஒரு நபர், தெரியாத எண்ணிலிருந்து, அந்த பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி, அதை மற்றவர்களுக்கும் அனுப்பி கேவலப்படுத்தப் போவதாக தொடர்ந்து பல்வேறு ஆபாசமான குறுஞ்செய்திகளை கடந்த ஏப். 22ம் தேதி முதல் மே 01ம் தேதி வரை தொடர்ந்து அனுப்பி மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஏப்.27ம் தேதி இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் விசாரணை மேற்க்கொள்ள தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவுக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஆல்வின் பிர்ஜித் மேரி தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் உட்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி மிரட்டியவர் தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த கிளமென்ட் மகன் ஆனந்தராஜ் (32) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து செல்போனையும் சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu