உலக வங்கி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட சி.வ.குளம் : ஆணையர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிக்க உலக வங்கி திட்டத்தின் கீழ் புதிதாக புனரமைக்கப்பட்ட சி.வ.குளத்தின் பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் ஊருக்குள் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. அதற்கு தீர்வு காண்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் புறநகர் பகுதிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் அனைத்திலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீ, 'மழை வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளன. அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்கும் வகையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட சி.வ. குளத்தின் அமைப்பு மற்றும் அதன் நீர் வழித்தடங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!