சிறப்பு காய்ச்சல் முகாம் -ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமை ஆணையாளர் சாருஸ்ரீ இன்று நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி கொரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் மாநகராட்சியின் நுண் உரக்கிடங்குகளை இன்று அவர் நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பாத்திம்மா நகர், கணேஷ் நகர், திரேஸ்புரம், தருவை ரோடு, மடத்தூர், முள்ளக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதர நிலையம் உட்பட 7 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முனாம்கள் இன்று நடைபெற்றது.
''தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக கொரோனா மாதிரிகளும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலமாகவும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனையின் மூலம் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூலம் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நோய் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தும் பொருட்டு நோய் தொற்று அறிகுறிகள் குறித்து சந்தேகிக்கப்படும் ஆரம்பக்கட்டத்தில் உள்ள நபர்களுக்கு கூடுதல் மாதிரிகள் எடுப்பதன் மூலம் மேற்கொண்டு நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆறு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமை ஆணையாளர் சாருஸ்ரீ இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு சிகிச்சை மேற்க்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, பெருமாள்புரம், ஜார்ஜ்ரோடு, தருவைக்குளம் மற்றும் முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சியின் நுண் உரக்கிடங்குகளை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மருத்துவர்.வித்யா, மருத்துவர்.பாசிக், மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி மற்றும் நகர் நல அலுவலர்கள் ராஜசேகர், ராஜசேகரபாண்டி, ஸ்டாலின், சரவணன், ஹரி கணேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu