ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கான படுக்கை வழிமுறைகள் - தூத்துக்குடி மாநகராட்சி வெளியீடு
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கான படுக்கை வழிமுறைகள் மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின் படி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் SpO2 ஆக்சிஜன் சதவீதத்தையும் இதயத்துடிப்பு Pulse வீதத்தையும் காண்பிக்கிறது. SpO2 - 94% க்கும் குறைவாக இருந்தால் கவிழ்ந்து படுக்கவும், உங்கள் வசதிக்காக 4 முதல் 5 தலையணைகள் தேவைப்படலாம். இதுஒரு சுழற்சி செயல்முறை ஓவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை படுக்கும் நிலையை மாற்ற வேண்டும். SpO2 ஆக்சிஜன் நிலை மேம்படவில்லை என்றால் 104 என்ற மருத்துவ உதவி எண்ணை அழைக்கவும் என தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றால் 3பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,080 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 762 பேர் இன்று குணமடைந்தனர். இதுவரை 45,663 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 5096 போ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu