தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் செப். 16 -ல் மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் செப். 16 -ல் மின்தடை அறிவிப்பு
X
தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் செப்டம்பர் 16 ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி நகரம் மற்றும் ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் 16.09.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அன்றையதினம் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரில், போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பாத்திமா நகர், தாமஸ் நகர், தெற்கு புது தெரு, தெற்கு காட்டன் ரோடு, ஆண்டாள் தெரு, செல்விஜர் தெரு, டி ஆர் நாயுடு தெரு, லயன்ஸ் டவுன், பனிமய நகர், WGC ரோடு, காந்திநகர் பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர் போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், ஓசனூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், பாஞ்சாலங்குறிச்சி தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவரங்காடு, க.சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

ஒட்டநத்தம் துணைமின் நிலையத்துக்குட்பட்ட சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஓட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி