தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைத்து, மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை ரோடு, ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர்,தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story