வெறிநாய்க்கடி நோய் தினம்: கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்

வெறிநாய்க்கடி நோய் தினம்: கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்
X

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினத்தையொட்டி, தூத்துக்குடி கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை, மாநகராட்சி  ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினத்தையொட்டி, தூத்துக்குடி கால்நடை மருத்துவமனையில், தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் (World Rabies Day) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்கள் தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலை 10 மணிக்கு துவக்கி மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 7000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியில் மட்டும் 140 நாய்களுக்கு இதுவரை இலவச தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கால்நடை மண்டல இயக்குனர் மருத்துவர் ராஜன் தெரிவித்தார்.

முகாமில், பிரத மருத்துவர் சந்தோசம் முத்துக்குமார், தூத்துக்குடி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், பன்முக மருத்துவமனை மருத்துவர் சுபஸ்ரீ, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு மருத்துவர் செய்யது அபுதாஹிர், மாநகர நல அலுவர் மருத்துவர் வித்யா, சுகாதர அலுவலர் ராஜபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers