ஊதிய உயர்வு: அமைச்சர் கீதாஜீவனிடம் அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை

ஊதிய உயர்வு:  அமைச்சர் கீதாஜீவனிடம் அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை
X
ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.412 வழங்க வேண்டும் என்ற வாரியத்தின் உத்தரவை அமல்படுத்த அமைச்சர் கீதாஜீவனிடம் தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.412 வழங்க வேண்டும் என்ற வாரியத்தின் உத்தரவை அமல்படுத்த அமைச்சர் கீதாஜீவனிடம் தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றுகின்ற ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.412 வழங்க வேண்டுமென வாரியம் போட்ட உத்தரவை அமல்படுத்தி நடவடிக்கை எடுத்திடகோரி எம்எல்எப் தொழிற்சங்கம் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநிலத் துணைத் தலைவர் தாஸ், தூத்துக்குடி அனல்மின்நிலைய திட்டச் செயலாளர் தர்மம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் மகாராஜன், மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் பேச்சிராஜ், எம்எல்எப் திட்ட கௌரவ ஆலோசகர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story