மீன்வளர்ப்பினை விரிவுபடுத்த மானியம் : பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் பண்ணைக்குட்டை மீன்வளர்ப்போர் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் "மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டம்" செயல்படுத்தப்படவுள்ளது. நீர் இருப்பு 0.25 ஹெக்டேர் முதல் 1.00 ஹெக்டேர் வரை உள்ள பண்ணைக்குட்டை மீன்வளர்ப்போர் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
பண்ணைக்குட்டை அமைக்க 50% மானியமும் (ரூ.3,50,000/-) செயல்பாட்டு செலவினத்திற்கு உள்ளீட்டு மானியமாக 40% (ரூ.60,000/-) வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி. தொலைபேசி எண்: 0461-2320458 என்ற முகவரியில், வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu