ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் : சில்வர்புரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் : சில்வர்புரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சில்வர்புரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சில்வர்புரம் பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி சில்வர்புரம் ஊர் பொதுமக்கள் சார்பாக ஒரு சிலர், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி மக்களின் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சார்ந்த தனலெட்சுமி கூறுகையில், நாங்கள் சில்வர்புரத்தில் வசித்து வருகிறோம். ஸ்டெர்லைட் காப்பர் மூலமாக பல நலத்திட்ட உதவிகள் எங்கள் ஊர் பொதுமக்களுக்கு கிடைத்தது. தற்போது நிலவிவரும் ,கொரோனா தொற்று பரவல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகளை தவிர்க்க, அரசு ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!