மறைந்த சாரணிய இயக்க மாவட்ட ஆணையர் புகழஞ்சலி கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
மறைந்த சாரணிய இயக்க தூத்துக்குடி மாவட்ட ஆணையர் உருவ படத்தை அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கல்வி மாவட்ட சாரண இயக்கத்தின் ஆணையர் ரா.சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தூத்துக்குடி கல்வி மாவட்ட சாரண இயக்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அவரது புகழ் வணக்க கூட்டம், சாரண இயக்கத் தலைவர் எ.மங்கள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சமூகநலன் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றினார். மாவட்டக் கல்வி அலுவலர் இ.வசந்தா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் எம்.ஜெயபாலன, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அ.கோட்டுராஜா, ஏடிபிசி சுப்பிரமணியன், கூடுதல் மாவட்டக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, சாரண இயக்கத்தின் மூத்த தேசிய பயிற்சியாளர் எபனேசர் சந்திரஹாசன், சாரண இயக்கப் பொருளாளர் பி.சரவணன், சாரண இயக்க மண்டல பொறுப்பாளர் நேரு ராஜா, திருமங்கலம் துணைச் செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வரும், ஆர்.சண்முகம் துணைவியாருமான ஆ.ஜெயாசண்முகம், மகள் ரா.ச.பிரியங்க, மகன் பிரித்விராஜ் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் சாரண இயக்க பொறுப்பாசிரியர்கள் மூலம் முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் முப்பத்தைந்தாயிரம் அமைச்சர் கரங்களில் வரைவோலையாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாவட்ட ஆணையர் ஜெயசுசிலா, மாவட்ட அமைப்பு ஆணையர் வள்ளியம்மாள், தினேஷ், ஒருங்கிணைப்பாளர் ஜாய் விக்டோரியா, சகாய மேரி வீனஸ், பயிற்சி ஆணையர் சிவகுமார், ஆறுமுகம், ஜான் சௌந்திராஜன், மற்றும் மாவட்டப் பொறுப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu