தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு.!!

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு.!!
X
18.07.2021 இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஜூலை 18) காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் -19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 17.07.2021 முடிய மொத்தம் 6,716 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 18.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

கீழ்க்கண்ட இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, அரசு பொது மருத்துவனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவனை - காயல்பட்டினம், அரசு பொது மருத்துவனை - கோவில்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - புதுக்கோட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் - வல்லநாடு, ஆரம்ப சுகாதார நிலையம் - ஏரல், ஆரம்ப சுகாதார நிலையம் - மெய்ஞானபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - காயாமொழி, ஆரம்ப சுகாதார நிலையம் - தென்திருப்பேரை, ஆரம்ப சுகாதார நிலையம் - முதலூர், அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, அயிரா வைசியா மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம் - பூங்கா சாலை,இ-சேவை மையம் - பரிவல்லிகோட்டை , அங்கன்வாடி மையம் - கீழமுடிமண், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - மேலமுடிமண், துணை சுகாதார நிலையம் - தீத்தாம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், சத்துணவு மையம் - கோவிந்தம்பட்டி,ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - அரசன்குளம், ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - திருமங்கலன்குறிச்சி, பெரியசாமிபுரம், ஆர்.சி.தேவாலயம் - கழுகுமலை, கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாயநலக்கூடம் - பேரிலோவன்பட்டி, சமுதாயநலக்கூடம் - பூசம்பட்டி, சமுதாயநலக்கூடம் - மார்த்தாண்டம்பட்டி, சமுதாயநலக்கூடம் - குருவார்பட்டி, சமுதாயநலக்கூடம் - குமாரபுரம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - கீழநட்டுக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - சென்னம்பட்டி, அங்கன்வாடி மையம் - எம்.துரைச்சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம்..!அமைச்சர் சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைப்பு..!