முன்னாள் படைவீரர்களின் ஓய்வூதிய ஒப்பளிப்பு நேரில் ஆஜராக அழைப்பு: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் ஓய்வூதிய ஒப்பளிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 01.03.1985-ம் ஆண்டிற்கு முன்பு படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையில் தங்களது மனைவியின் பெயரினை பதிவு மேற்கொள்ள வேண்டி தாங்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலஅலுவலகத்தில் நேரில் ஆஜராகி படிவம் பெற்று பூர்த்தி செய்து அதற்குரிய ஆவணங்களுடன் மீள சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu