தூத்துக்குடியில் பாஜக சார்பில் "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி"
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கிழக்கு மண்டலம் சார்பில் "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" நிகழ்ச்சி பாளை ரோட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியினை மாநிலம் முழுவதும் மண்டலங்கள் வாரியாக நடத்த வேண்டும் என அன்னமையில் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கிழக்கு மண்டலம் சார்பில் "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" நிகழ்ச்சி பாளை ரோட்டில் உள்ள பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், துணை தலைவர் கணேஷ் வைத்தியலிங்கம். மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் விக்னேஷ். தகவல் தொழில்நுட்ப கிழக்கு மண்டல தலைவர் ஜெயகுமார். மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், மாவட்ட அரசு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுகுழு உறுப்பினர் இசக்கி முத்து மற்றும் கிழக்கு மண்டல பொது செயலாளர் ராஜேஷ்கனி, சவுந்தரராஜன் மற்றும் கிழக்கு மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu