ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்க கூடாது: கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகிகள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைத்து கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தலைமையில் நிர்வாகிகள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி இருந்து செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டுமென ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது அவ்வாறு அனுமதி வழங்கினால் ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு சதிகளை செய்து ஆலையை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். எனவே இதற்கு மாற்றாக தமிழக அரசே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அதன் தலைமை செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைத்து கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்காமல் நிரந்தரமாக மூட வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சுட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu