நாசரேத் பகுதியில் காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

நாசரேத் பகுதியில் காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
X

நாசரேத் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்.

நாசரேத் பகுதியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 24 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், கடத்தலை கண்காணிக்கும் வகையிலும் தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு கஞ்சா, புகையிலைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 22,000 ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் உதவி ஆய்வாளர் எபனேசர் மற்றும் போலீசார் நேற்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகப்பைகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட விக்டர்

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில், அதில் அதே பகுதியை சேர்ந்த செல்வன் விக்டர் (58) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் செல்வன் விக்டரை கைது செய்து அவரிடம் இருந்த 22,000 ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings