குடியரசு தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற 73 வதுகுடியரசு தின விழாவில், காவல்துறையினர், காவல் அமைச்சு பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 46 பேருக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் சிறந்த பணிக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, திருச்செந்தூர் உட்கோட்டம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி நகர உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், விளாத்திகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் சண்முகம்,முத்து, சபாபதி, ஆனந்தராஜன்,முத்துராமன்,மேரி ஜெமிதா,ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் பெற்றோரை பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu