தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர் தகவல்

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர் தகவல்
X
தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் வரும் நவ.1,2,3 தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் வரும் நவ.1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விடுதலின்றி பெறுவதற்கு ஏதுவாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையில் காலை 8.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையில் அனைத்து நியாய விலைக்கடைகளையும் திறந்து வைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விடுதலின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையில் காலை 8.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையில் செயல்படும் என்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு விநியோகத்திட்டத்தின்கீழ் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விடுதலின்றி மேற்கண்ட தினங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த விநியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்களின் வசதியை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அத்தியாவசிய பொருட்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் பண்டிகைக் காலம் முடிவடைந்த பின்னர் 08.11.2021 திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருமாறும் சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுச் செல்லுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!