காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி அறிவுரை...
தூத்துக்குடியில் காவல் துறையினருக்கு ரயில்வே டிஐஜி விஜயகுமார் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு கடந்த 27.11.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. அஇதில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வு நாளை (06.02.2023) முதல் வருகின்ற 11.02.2023 வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
உடற்தகுதி தேர்வு சம்பந்தமாக காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சென்னை ரயில்வே காவல்துறை துணை தலைவர் விஜயகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி தருவை மைதானம் உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இந்த உடற்தகுதி தேர்வில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 11 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீஸார் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்கள் என மோத்தம் 250 பேர் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அறிவுரைக் கூட்டத்தில் காவலர் உடற்தகுதி தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் என்னென்ன பணிகள், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ரயில்வே காவல்துறை துணை தலைவர் விஜயகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுரைகள் வழங்கினர்.
கூட்டத்தில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் சத்தியராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மதுரை காவல் உதவி ஆணையர் கல்பனா உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், மாவட்ட காவல் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வகுமார், மாரியப்பன் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu