ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையானது போராட்டம் காரணமாக தமிழக அரசால் மூடப்பட்டது. தொடர்ந்து ஆலையில் பணிபுரிந்த மற்றும் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பண்டாரம் பட்டி, மீளவிட்டான், குமாரரெட்டியாபுரம், வடக்கு சிலுக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்ந்து பேசிய பண்டாரம் பட்டியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்தோம். தற்பொழுது ஆலை அடைக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு இழந்து பொருளாதாரம் இன்றி தவித்து வருகின்றோம். ஸ்டெர்லைட் ஆலை தனிநபராக மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காப்பர் தயாரிப்பில் பெரும் பங்கு வகித்து வந்தது. அத்துடன் பல்வேறு பொது நல செயல்பாடுகள் மூலமாக சமூக அக்கறையுடன் செயல்பட்டு வந்துள்ளது. எனவே விரைவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்த பண்டாரம்பட்டி கண்ணன் கூறினார்.


Tags

Next Story