தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழவதும் வருகிற ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி அடைவோரை வாக்காளர்களாக சேர்க்கும் பணி முழு வீச்சாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாரம் தோறும் விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளராக சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவை இணைந்து 18 வயது பூர்த்தி செய்ய இருக்கும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை நடத்தியது.
இந்த முகாமில், கல்லூரியில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, ணவிகள் கலந்து கொண்டு தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதிய வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் கோபால் விளக்கம் அளித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களை வாக்காளராக இணைத்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu