திருநங்கைகள் உட்பட 97 பேருக்கு புதிய ரேசன் கார்டுகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கல்
தூத்துக்குடியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. அதேபோல் 30.7.2021 அன்று 4370 நபர்களுக்கு என மொத்தம் 8876 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 97 நபர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகளுக்கும், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் என மொத்தம் 97 நபர்களுக்கு இன்றைய தினம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், வட்ட வழங்கல் அலுவலர் வதனாள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu