மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் மது கலாச்சாரம் காரணமாக இளைஞர்கள் முதல் பெண்கள் வரை போதை பழக்கத்திற்கு அடிமையாகி கலாச்சார சீரழிவு உருவாகி வருவதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி கல்லூரி அருகே மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வைத்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில், இன்று நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வள்ளியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மண்டல செயலாளர் கிருஸ்டன்டைன் ராஜசேகர், மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

போராட்டத்தில், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஶ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ், திருச்செந்தூர் தொகுதி செயலாளர் ஞானசேகரன், தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா, ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேஷ் மற்றும் பட்டாணி மெகர்நிஷா உட்பட ஏராளமானர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings