தாமதமாக வரும் பேருந்து: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு

தாமதமாக வரும் பேருந்து: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு
X

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மாணவ, மாணவிகள்.

தாமதமாக வரும் பேருந்தால் பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவிகள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், மனு அளிக்க வருவோரை கண்காணிக்கும் பணியில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளிச் சீருடை அணிந்த மாணவ, மாணவிகள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளி்க்க வந்தனர்.

அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் அரசு பேருந்து உரிய நேரத்தில் வராததால் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்திற்கு வந்து செல்லும் அரசு பேருந்து காலை 8 மணிக்கு வந்த நிலையில், தற்போது தாமதமாக 8:30 மணி அளவில் வருகிறது.

இதன் காரணமாக தங்களது கிராமத்திலிருந்து பள்ளி செல்லக்கூடிய மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே, போக்குவரத்து கழகம் உரிய நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி செல்வதற்கு ஏற்ற வகையில் காலை 8 மணிக்கு பேருந்து இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு முறையாக அரசு பேருந்தை இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings