தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி வாரம் அனுசரிப்பு
மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ.
நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு சேவை வழங்குவது மேம்படுத்துவதற்கும் ஒரு பரந்த பிரச்சாரம் "நல்லாட்சி அனுசரிப்பு" என்ற தலைப்பின் கீழ் நல்லாட்சி வாரம் வருகின்ற டிச.20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 6 நாட்கள் முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சேவையினை துரிதமாக வழங்கும் விதமாக அந்தந்த மண்டல அலுவலகங்களில் டிச.20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் பிரிவு சார்பில் 1000 சதுர அடிக்கு உட்பட்ட மனைகளுக்கான காலிமனை வரி / சொத்து வரி நிர்ணயம் செய்தல். சொத்து வரி / குடிநீர் கட்டணம் வரிவிதிப்பாளர்கள் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் சொத்து வரி விதிப்பில் மதிப்பு மண்டல பெயர் மாறாமல் தெரு பெயர் திருத்தம்.
பொறியாளர் பிரிவு - குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் கட்டணம் விகிதம் மாற்றுதல். நகரமைப்பு பிரிவு - 1200 சதுர அடிக்கு வரையிலான கட்டிடங்களுக்கு கட்டிட / திட்ட அனுமதி அங்கீகரிக்கப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்துதல். பொது சுகாதார பிரிவு சார்பில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் பிழைதிருத்தம் (2018 ஆம் ஆண்டு முதல் நடப்பு வரை அந்தந்த மண்டல அலுவலகங்கள்) 2017ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் பிறப்பு / இறப்பு சான்று திருத்தங்கள் - கிழக்கு மண்டல அலுவலகம்.
எனவே பொதுமக்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட கால அளவிற்குள் விண்ணப்பித்து உடனடி தீர்வு காணும் வகையில் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu