தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடியில் தமாகா வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் 2ம் கேட் பகுதியில் வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் இன்று திரேஸ்புரம், பாண்டுரங்கன் தெரு, 2ம் கேட் ஆகிய பகுதிகளில் வேட்பாளருடன் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.பின்னர் இரண்டாம் கேட் பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு நடந்தே கடை கடையாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கி வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறி வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அமிர்தகணேசன், பெருமாள், தமாகா சார்பில் மாநகர தலைவர் ரவிக்குமார், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம் உட்பட அதிமுக கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture