தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தீவிரம்
X

வல்லநாட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையெடுத்து, புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிதாக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆழ்வார்தோப்பு பகுதியில் புதிதாக ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கோமதி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings