வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு
X

தூத்துக்குடியில் பூட்டிய அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டார்.

தமிழக சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்பட்டு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள தூத்துக்குடி பிரையண்ட்நகர் வஉசி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இதையடுத்து, அங்கு தொகுதி வாரியாக பிரிக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..