சிறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக்கடன்

சிறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக்கடன்
X

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க, 50 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதமானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 இலட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிடச்சான்று இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும்.

நில உடைமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare technology