தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
X

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 5144 பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த பணியில் காவல் துறையினர் எவ்வாறு ஈடுபடுவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடி அருணாசலம் மாணிக்கவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது, காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சு பணியார்களுக்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் தேர்வுக்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் மேற்பார்வையில் 7 காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 460 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், வசந்தராஜ், லோகேஸ்வரன், சிவசுப்பு, ஜெயராஜ், சம்பத், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா