குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
X

தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் கிளின்டன் (25). இவரை தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (24) உள்பட 3 போ் சேர்ந்து கொலை செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அந்தோணிராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பரிந்துரை செய்தார்.

அது போல் தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடம் தம்பிக்கை மீண்டான் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் (45) என்பவர் தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த ஒருவரை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் அந்தோணிராஜ், ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!