காய்கனி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் டிஎஸ்பி ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்து நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசுபிறப்பித்த முழுஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
காலை 10 மணிக்குள் மார்க்கெட் கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் மார்க்கெட் பகுதிகளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாநராட்சி ஆணையர் , டிஎஸ்பி கணேஷ், மற்றும் போலீசார் இன்று காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு மேற்க்கொண்டனர். மார்க்கெட்டில் சமுக இடை வெளியின்றி பொது மக்கள் அதிகமாக கூடியதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மார்க்கட்டை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்னன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இதுபோல் தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் மட்டுமே காய்கறி மளிகை சாமான்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காய்கறி மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலும், வஉசி மார்க்கெட் அதன் அருகே உள்ள வெளிப்புறத்திலும் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu