சசிகலா அரசியல் விலகலை வரவேற்கிறோம்- எல்.முருகன்

சசிகலா அரசியல் விலகலை வரவேற்கிறோம்- எல்.முருகன்
X

சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக சொல்லியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தூத்துக்குடியில் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் முருகன் பேட்டி அளித்தார். இதில் கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நடைபெற உள்ள வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற பேரணியில் கலந்து கொள்ள செல்வதாக கூறிய அவர், நாளை மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்றார். தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. அதிமுக உடனான எங்களுடைய கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டுள்ளது .

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக சொல்லியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் . மேலும் மத்தியஅரசு தமிழகத்திற்கு செய்துள்ள திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடங்கிய பின்னர் காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல்காந்தி கல்லூரி ஒன்றில் பிரதமருக்கு எதிராக விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார். அது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!