வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் எஸ்பி ஆய்வு

வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் எஸ்பி ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவலூர், பத்மநாபமங்கலம் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று (04.03.2021) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவலூர் மற்றும் பத்மநாபமங்கலம் ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெடிமருந்து கிடங்கில் பராமரித்து வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, ஸ்ரீவைகுண்டம் சப் இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் வசந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி