ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை
X

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்ணை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள பனைக்குளத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் யோவான்(35). இவர் சமீபத்தில் பனைக்குளத்தை சேர்ந்த பெண்ணை வெட்டியது தொடர்பாக கைதாகி ஜாமீனில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இன்று யோவான், ஊரிலுள்ள காட்டுப்பகுதியில் கழுத்து துண்டாக வெட்டப்பட்ட நிலையிலும் வலதுகை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து சாத்தான்குளம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவில்லை.இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!