விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்
X

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியூ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் திருத்த சட்டங்களை கைவிடக் கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்தும் தூத்துக்குடி பாளை., ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் சங்கரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.மறியலில், சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, குமாரவேல்,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!