தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
X

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை வ.உ.சி கல்லூரி எதிரிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.பேரணியானது பனிமயமாதா ஆலயம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் சாலையில் இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்ற வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி., வழங்கினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அவர்கள் ஹெல்மெட் அணியாத நிலையில் அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !