திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏக்கள் மீதும் விரோத போக்கை கையாண்டு வருவதாகவும், தொடர்ச்சியாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதிமுக தலைமை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்கான புகார்களில் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்ல்ஏ மோகன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story