Thoothukudi News-தூத்துடியில் வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!

Thoothukudi News-தூத்துடியில் வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!
X

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

வாக்காளர் தினத்தையொட்டி தூத்துக்குடி வ.உ..சி கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர் ரங்கோலி கோலப்போட்டி நடந்தது.

Thoothukudi News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரம் குறித்து நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை பொதுமக்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Thoothukudi News

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மக்களவை பொதுத் தேர்தல் -2024 தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து விழிப்புணர்விற்கான நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது,

மக்களவை பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக பொதுமக்களிடம், மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரங்களின் விழிப்புணர்வு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிப்பார்க்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து 10 சதவிகித இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அவை தேர்தல் பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக வைக்கப்பட்டுள்ளன.

Thoothukudi News

இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையம் 28-12-2023 அன்றுமுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் விழிப்புணர்விற்காக அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்கள் மூலம் தேசிய வாக்காளர் தினமான இன்று முதல் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை விளக்க எல்டிஇ திரை கொண்ட வாகனம் செல்லவுள்ளது.

Thoothukudi News

சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரம் விழிப்புணர்வு வாகனத்தை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதற்கென நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் மற்றும் காவல் பாதுகாப்புடன் குறிக்கப்பட்ட வழித்தடத்தில் பொதுமக்களின் விழிப்புணர்விற்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்.

Thoothukudi News

முன்னதாக தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றதை மாவட்ட மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டார்.நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) செந்தில்வேல்முருகன், தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!