தூத்துக்குடி: இன்று 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! -4 பேர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி: இன்று  167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!   -4 பேர் உயிரிழப்பு..!
X

Covid19

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று 167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,015 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 358 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, இதுவரை 50, 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் 2434 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!