சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை- சம்பவ இடத்தில் DSP தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை-   சம்பவ இடத்தில் DSP தீவிர விசாரணை
X

சாத்தான்குளம் DSP காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் கொலை- DSP காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் தைக்கா தெரு பகுதியில் மார்ட்டின் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை. சம்பவ இடத்தில் சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சாத்தான்குளம் தைக்கா தெரு பகுதியில் இன்று இரவு அவரது இருசக்கர வாகனத்தில் பள்ளிவாசல் அருகே வந்தபோது மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியதில் நிலைகுலைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

ஆனால், அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மார்ட்டினின் உறவினர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சூழ்ந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!