வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை: நன்றி தெரிவித்த வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம்

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை: நன்றி தெரிவித்த வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம்
X
சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை : தமிழக அரசுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் நன்றி!

இந்திய விடுதலை போருக்கு முதல்முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதற்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் அமைப்பினர் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் அமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது: தமிழக பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டசபையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் சாமிநாதன் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர், தேசப் பற்றாளர்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர், நீண்டகாலமாக தலைநகர் சென்னையில் இந்திய விடுதலை போருக்கு முதல்முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது, இந்திய ஏகாதிபத்தியத் தை எதிர்த்து முதல் சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி வளாகத்தில் முழு திரு உருவ சிலை அமைக்கவும், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் மாணவ- மாணவியர்கள், கட்டபொம்மன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி அமைக்கவும், திருப்பூர் உடுமலை பகுதியில் தளி பாளையக்காரர் எத்திலிப்ப நாயக்கருக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கவும், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு, கேள்வி நேரத்தின் போது தலைநகர் சென்னையில் கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைத்திட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தலைநகர் சென்னையில் கட்டபொம்மன் அவர்களுக்கு சிலை அமைப்பதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த அனைத்து தரப்பு அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் வீரபாண்டியகட்டபொம்மன் தேசிய கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!