மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி, குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் அமைந்துள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் குப்பைகளை எடுத்து வர பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும் இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதியில் ரூ.20.82 லட்சத்திற்கு செட், உரம் தயாரிக்கும் இயந்திரம் ரூ.39.92 லட்சம், கழிப்பிட வசதி ரூ.2.96 லட்சம், குடிநீர் வசதி ரூ.1.58 லட்சம், எலக்ட்ரிகல் இன்சினிரேட்டர் ரூ.3.75 லட்சம், பிளாஸ்டிக் சாரிடர் ரூ.1.38 லட்சம், சுற்றுச்சுவர் ரூ.3.30 லட்சம், பல்வேறு கிராம ஊராட்சிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வர மின்சாரத்தால் இயங்கும் குப்பை கொண்டு வரும் மூன்று சக்கர வாகனம் ரூ.11 லட்சம், தோட்ட கருவிகள் 0.26 லட்சம் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி விமான நிலையம், குமாரகிரி ஊராட்சி, முடிவைத்தானேந்தல் ஊராட்சி, கட்டாலங்குளம் ஊராட்சி, சேர்வைகாரன்மடம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் தினசரி சேரும் சுமார் 6 டன் கழிவுகள் இங்கு பிரிக்கப்பட்டு மக்கும் கழிவுகள் எந்திரத்தின் மூலம் உரமாக மாற்றப்பட்ட உள்ளது.
இதில்,முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, தூத்துக்குடி ஒன்றியக்குழு தலைவர் வசுபதிஅம்பாசங்கர், உதவி செயற்பொறியாளர் அமலா ஜெசி ஜாக்குலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் நர்மதாருபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu