ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ நிதியுதவி

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ நிதியுதவி
X

உயிரிழந்த முருகையா குடும்பத்திற்கு அரசு நிதியுதவியாக வழங்கப்படும் ரூ.4 லட்சத்திற்கான காசோலை வழங்கும் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த முருகையா குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், எம் வெங்கடேஷ்வரபுரம், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி ரெட்டியார் மகன் முருகையா (57). விவசாயி. இவர் நேற்று மாலை 6 மணியளவில் ஆடுமேய்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா சம்பவ இடத்திற்கு சென்று முருகையா உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மின்னல் தாக்கி உயிரிழந்த முருகைய்யாவுக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், ராமலட்சுமி என்ற மகளும், ராமநாதன் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முருகையா இல்லத்திற்கு நேரில் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிதியுதவியாக வழங்கப்படும் ரூ.4 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

இதில் திமுக கிழக்கு ஒன்றியம் காசி விஸ்வநாதன், ஒட்டப்பிடாரம் பெருந்தலைவர் ரமேஷ், மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் நாராயணன், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் முத்து மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!