சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டெர்லைட் சார்பில் சானிடரி நாப்கின் தயாரிப்பு துவக்கம்

சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டெர்லைட் சார்பில் சானிடரி நாப்கின் தயாரிப்பு துவக்கம்
X

தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் சானிடரி நாப்கின் தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஒரு சுகாதார நாப்கின் உற்பத்திப் பிரிவை தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் சானிடரி நாப்கின் தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் (menstrual hygiene products) தடையின்றி கிடைப்பதென்பது இந்தியாவில் முக்கிய பிரச்சனையாக உள்ளது, குறிப்பாக கிராமப்புறங்களில் இது குறித்த விழிப்புணர்வு பொதுவாக இல்லை. மேலும் அத்தகைய பொருட்கள் கிடைப்பதும் குறைவாகவே உள்ளது. ஏற்கனவே பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் கிராமப்புறங்களிலுள்ள பெண்களுக்கு, தங்கள் உடல்நலம் குறித்த தேர்வுகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்த இடைவெளியைக் குறைக்க, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஒரு சுகாதார நாப்கின் உற்பத்திப் பிரிவை தொடங்கி உள்ளது. இந்த திட்டம் பெல் சுமங்கலி சுயஉதவிக் குழு உரிமையாளர் அன்னலட்சுமி, மற்றும் ஸ்மைலி சுமங்கலிகள் குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 20 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள், சிறப்பாக செயல்படுவோர்க்கு, முழுநேர ஊழியர்களாக உற்பத்தி பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

உற்பத்தியின் அளவைப் பொறுத்து அவர்கள் ஒரு நாளைக்கு 350-500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு நாளில் 3150 நாப்கின்கள் வரை உற்பத்தி செய்யலாம், இது டெண்டர்கள் மூலம் விற்பனைக்கு வழங்கப்படும். தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களின் விற்பனைக்கான பயிற்சியை தன்னார்வ தொண்டு நிறுவனம், கிராமப் பெண்களின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தும். மேலும் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி, வருமானத்தை பெருக்க நுண்ணிய அளவிலான தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் இக்குழு செயல்படும்.

இந்த திட்டம் அப்பகுதியிலுள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மலிவு விலையில் கிடைப்பதற்கு வழி வகுக்கும். மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் நன்மைகளை பயிற்றுவிப்பதுடன், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இந்த முயற்சியைத் தொடக்கிய ஸ்டெர்லைட் காப்பர் சிஓஓ, சுமதி கூறுகையில், "இது பெண்களின் ஆரோக்கியத்திற்கான மிகவும் அவசியமான முயற்சியாகும், மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இது மகத்தான பயனை அளிக்கும். இந்தத் திட்டம் தூத்துக்குடியிலுள்ள கிராமப்புறப் பெண்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் உறுதி அளிக்கிறது.

பெண்களுக்குத் தேவையான சமூகத் திட்டங்கள் மூலம் சிறந்த வாய்ப்புகளை தூத்துக்குடியில் உருவாக்கி அதை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது ஸ்டெர்லைட் காப்பர். சகித் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் பல திறன் பயிற்சி மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் வேதாந்தாவின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. 3100 SHG-கள் மற்றும் 250 குறுந்தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, 4800 பெண்களுக்கு சேவை செய்யும் 15-க்கும் மேற்பட்ட சமூகத் திட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!